Friday, May 20, 2011

"தஸ்லீமா நஸ்ரின்" எனும் இரும்புப் பெண்மணி

"தஸ்லீமா நஸ்ரின்"  இந்த பெயர் என்னுள் உண்டு பண்ணிய மாற்றங்கள் பல. பெண்ணுரிமை,பெண்ணியம், பால் நிலை சமத்துவம் இவைஎல்லாம் வெறுமனே " ஆணுக்குப் பெண் சரிநிலை சமம்" என்பதனுள் மட்டுப் பட்டவை அல்ல. அதையும் தாண்டிய ஒன்றென என்னை உணர வைத்தவை இவரது படைப்புகள். தன்னைப் பெற்ற தாயின் மரணச் சடங்கை செய்வதற்கு கூட இவர் அனுமதிக்கப் படவில்லை. காரணம் இவரது படைப்பான "லஜ்ஜா (Shame)" ஏற்படுத்திய பாதிப்பு!அந்தப் புத்தகத்தில் அவர் இஸ்லாத்திற்கு எதிராக எதுவும் எழுதவில்லை. அதில், அயோத்திய மசூதி இடிப்பு ஒட்டி, நடந்த இனக்கலவரத்தில், அதன் உணர்ச்சி மேலீட்டில் இருந்த இஸ்லாமியர்கள்,வங்க தேசத்தில்  நடத்திய வன்முறை பற்றி தான் விலாவாரியாக எழுதி இருந்தார் . இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் தாக்குதலுக்குள்ளான போது, அந்நிய நாட்டில், இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றும் வங்காளதேசத்தில், பெரும்பான்மையான முஸ்லிம்கள் தொடுத்த பதில் தாக்குதல் தான் அது.வங்க தேசம், எல்லைக் கோடுகளை அகற்றி விட்டால், இந்தியாவின் மற்றொரு மாகாணமாகத் தான் இருக்கும். அந்த வகையில் தான் அவர்கள் இந்தியாவில் நிகழ்ந்த ஒரு துரதிர்ஷ்ட சம்பவத்திற்கு எதிர்வினை புரிந்தனர்.

இந்த சம்பவத்தை தஸ்லிமா நஸ்ரின் தன் நாவலில் விலாவாரியாக எழுதி இருக்கிறார். இது ஒரு செய்திப் பதிவு மாதிரி.ஆனால், வங்க முஸ்லிம்கள் அதை அவ்வாறு எடுத்துக் கொள்ளத் தயாராகவில்லை. தஸ்லிமா தங்களுக்குத் துரோகம் செய்தார் என்றே எடுத்துக் கொண்டனர். இது அவர் ஒரு பெண் என்பதினால் எழுந்த எதிர்வினை அல்ல. மாறாக இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுதினார் என்ற குற்றச்சாட்டு. (இஸ்லாத்திற்கு எதிராக அல்ல) . இதனால் தஸ்லிமா
உடல் ரீதியாக தாக்கப் பட்டார், இவரது  புத்தகங்கள் தடை செய்யப் பட்டன. நாடு கடத்தப் பட்டார்! நானாக  இருந்திருந்தால் நிச்சயம் எழுதுவதையே விட்டு ஒழித்திருப்பேன். இவர் தடம் மாறவில்லை. மானிட உரிமை மீறல்களையும், பெண் உரிமை மீறல்களையும், மத வாதத்தையும்  தூண்டுபவர்களின் சிம்ம சொப்பன மானார். இவரை விமர்சிப்பவர்கள் பல பேர். அந்த  விமர்சனங்களும் இவரின் துணிச்சலின் மீதான எரிச்சலால், ஒரு பெண் இவ்வளவு பேசுவதா என்ற கசப்பினால், பெண்ணடிமை தனங்களால், தமது முகமூடிகளும் கிழிக்கப்படுமென்ற  பயத்தினால் உருவானவை/ உருவாக்கப் பட்டவை தான். என்னைப் பொறுத்தவரை தஸ்லீமா ஒரு இரும்புப் பெண். பெண்கள் அனைவருக்கும் முன்னோடி. பாரதியின் பெண் வடிவம். வாங்க தேசம் பெற்றெடுத்த இரும்புப் பெண். நான் ரசித்த பெண் இவர். இவரது எழுத்திக்களில் என்ன கூர்மை. என்ன வொரு தெளிவு . ஒரே ஒரு ஆசை. எத்தனையோ பேருக்கு எத்தனையோ ஆசை சினிமா நட்சத்திரங்களை சந்திக்க ஆசை, அவர்களுடன் நிழல் படம் எடுக்க ஆசை, உலகம் சுற்ற ஆசை, அனால் எனக்கோ தஸ்லீமா வை ஒரே ஒரு முறை சந்திக்க ஆசை. 5 வருடங்களின் முன் எழுந்த ஆசை. ஒரே ஒரு முறை கை குலுக்க ஆசை. ஒரே ஒரு வார்த்தையாவது பேசிவிட ஆசை. அந்த இரும்பு பெண்மணியை நேரில் கண்டு வியக்க ஆசை.


சக்கரம் – தஸ்லிமா நஸ்ரின் கவிதை!




அவர்கள் சிவப்பு ஆடைகளை
அவளுக்குக் கொடுத்தார்கள்
ஏனெனில் சிவப்புதான்
கண்ணைப் பறிக்கும் நிறம்,
அவளின் கழுத்தில் தொண்டையில்
நெக்லஸ் போட்டிருக்கிறார்கள்,
கழுத்தில் சுற்றியுள்ள நெக்லஸ்
நாயின் கழுத்தில் போடப்படும்
வார்ப்பட்டையைப்போல இருந்தது.
அதை விருந்துகளுக்கும்
விழாக்களுக்கும் அணிந்துகொள்கிறார்கள்.
அவளின் காதுகளும், மூக்கும்
கூர்மையானவை.
காதிலும், மூக்கிலும்
அணிகலன்களைப் போட்டிருக்கிறார்கள்;
ஏனெனில் அவளே சிறிது ஒளிர்கிறாள்,
அணிகலன்கள் வரை வைடூர்யங்களாலும்
இன்னும் ஒளிர்கிறாள்
அவளுடைய மெருகு கூடுதலாகிறது.
அவளுடைய கரங்களுக்கு
வளையல் போட்டிருக்கிறார்கள்
அவை விலங்கின் வடிவத்திலமைந்து
கைகளை அசைக்க முடியாமல் செய்கின்றன
கணுக்கால்களுக்குக் கிணுகிணுக்கும்
காப்புகள் அணிவித்திருக்கிறார்கள்
இதனால் அவள் எங்கேயிருக்கிறாள்
என்பதை எளிதில் அறிய முடிகிறது.
முகத்தில் அழகுபடுத்தும் பொருள்களை
வண்ணப்பூச்சுகளைத் தடவிக்கொள்கிறாள்.
கண்களுக்கு, கழுத்திற்கு,
உதடுகளுக்குப் போன்ற இடங்களுக்கும்
மேலும் கூடுதலான பூச்சுகளைத்
தேவையான அளவிற்குப் போடுகிறாள்.
ஒரு விற்பனைச் சரக்கைப்போல மாறினாள்.
கிராமங்களில், நகரங்களில்
நடைபாதைகளில், தெருக்களில்
சேரிகளில், உயர்குடியினர் வகிக்குமிடங்களில்
உள்நாட்டில், வெளிநாட்டில்
எல்லா இடங்களிலும் அவள்
விற்பனைச் சரக்கானாள்.
பல்வேறு வழிகளில், பல விலைகளில்
அவள் விற்கப்படுகிறாள்.
அவள் தொடர்ந்து விற்கப்படுகிறாள்.
வெளிப்படையாக விற்கப்படுகிறாள்.
சில இடங்களில் விற்பனையை
நவீனமயமாக்கியிருக்கிறார்கள்.
பெண்ணின் வளர்ச்சியென்ற போர்வையில்
நவீனமயமாக்கப்பட்டதாகப் பாராட்டுவார்கள்.
பெரும்பாலான முட்டாள் பெண்கள்
சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள், தங்கள் ஆசைகளை
நிறைவேற்றிக்கொள்வதற்காக
விலங்குகளை மாட்டிக்கொள்கிறார்கள்.
இந்த விலங்குகளை உடைப்பதற்குச்
சிலர் உருவாகுகிறார்கள்;
அவர்களும்கூட இந்தச் சிக்கல்களில்
சில தடவைகள் வந்து
வலையில் சிக்கிக்கொள்கிறார்கள்
அல்லது சிலர்
வேறு வழியில் இந்தப்
பொறியில் சிக்கிக்கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment